Friday 21 September 2018

இரத்த சோகையை குணப்படுத்தும் பசலை கீரை






















பசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. இரத்த சோகை உள்ள நோயாளிகள் அடிக்கடி உணவில் பசலைக்கீரையை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

பசலை கீரையில் அமினோ அமலிங்கள், வைட்டமின்கள், கரிம அமிலங்கள், பாலிசாக்ரைடுகள் மற்றும் பைபிளேவனாய்டுகள் உள்ளன. வைரசுக்கு எதிராக செயல்படும் கிளைக்கோ புரதம் ஒன்றும் காணப்படுகிறது.


பசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது.  எனவே இரத்த சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் பயன் தருகின்றது. இரத்தித்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து (ஹீமொகுளோபின்) உள்ளது.


புரதங்களைப் பலப்படுத்தும் அமிலங்கள் உள்ளன. இரத்த விருத்தி உண்டாக்கும், சோடியம், போலாசின், கால்சியம் உள்ளன. ஆனால் இதில் கொழுப்பு சத்து இல்லை. பசலைக்கீரை மலத்தை நன்றாக இளக செய்கின்றது. எரிச்சலைத் தணிக்கின்றது. திசுக்களின் அளவை இது குறைக்கின்றது.


நீரிழிவு, இரத்தக் குறைவு, கால் விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவற்றை குணப்படுத்த பசலைக்கீரை மிகவும் உதவுகின்றது. இதன் சாறு, சிறுநீரில் கற்கள் இருந்தால் அவற்றைக் கரைக்க உதவுகின்றது.


கற்களை கரைத்து வெளியேற்றும் சக்தி அதற்கு உள்ளது. சிறுநீரக கோளாறுகளையும் இது அகற்றுகின்றது. இதன் சாற்றை கொப்பளித்தால் தொண்டைப்புன் குணமாகின்றது.


இலைகளை கசாயம் வைத்து அருந்தினால் காய்ச்சல்கள், கல்லடைப்பு, சுவசப்பைகளிலும் குடல்களிலும் ஏற்பட்டுள்ள வீக்கங்கள், சுவாசிப்பதில் சிரமம், வேகமாக இயங்கும் சுவாசம் ஆகியவை குணமாகின்றன. இத்தைகைய நோய்களின் போது இது எரிச்சலை தணிக்கின்றது.


========================================================================

ADVERTISEMENTS




For more details please visit www.advertisementmart.com

No comments:

Post a Comment