Friday 21 September 2018

பிரண்டையின் நன்மைகள்


40 வயதுக்கு மேல் மூட்டுவலி இயல்பாக ஆகிவிட்டது. இதற்காக மருந்து மாத்திரைகளையும் தைலங்களையும் உபயோகிக்க வேண்டியதாக உள்ளதுஎன்னதான் செய்தாலும் அடுத்த நாளே இந்த மூட்டுவலி மறுபடியும் வந்து விடுகின்றதுஇதற்காகத்தான்  இயற்கையை ஒரு தாவரத்தை வழங்கியுள்ளது அதுதான் பிரண்டை.

இயற்கையாகவே கால்சியம் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ள இந்த பிரண்டை நமது எலும்புகளுக்கு நல்லதோர் சக்தியை அளிக்கின்றது. பிரண்டை இடுப்புவலி மூட்டுவலி மற்றும் அனைத்து உடல் சார்ந்த வலிகளுக்கும் மற்றும் நரம்புகளில் முடிச்சுகள் நீங்குவதற்கு பிரண்டை ஒரு அற்புதமான தாவரம்.
 வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பிரண்டை துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் வலிகள் அனைத்தும் நீங்கி ஆரோக்கியமாக வாழ முடியும்
(குறிப்பு :  வாரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் சாப்பிட வேண்டாம்)

மேலும் பிரண்டை ஆனது கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆற்றலும் கொண்டது.  எலும்பு உடைந்தவர்கள் இதை வாரம் இருமுறை துவையலாக செய்து சாப்பிட்டுவர விரைவில் எலும்புகள்  சக்தி பெற்று குணமடையும்

முந்தைய காலத்தில் நமது முன்னோர்கள் பிரண்டையை வாசலின் முன் கட்டி வைப்பார்கள் அதற்கு காரணமும் உண்டு அதில் காற்று பட்டு நம் மீது வீசும் போது நமது உடலில் உள்ள வியாதிகள் குணமடையும் என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள் .

செரிமானப் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இது சிறந்த ஒரு மருந்து. மற்றும் மூல வியாதி உள்ளவர்களுக்கு இது நல்ல ஒரு தீர்வு. நமது இரத்த  குழாய்களிலுள்ள கொழுப்புகளை கரைக்க உதவும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்பு வலி முதுகு வலி முதலியவற்றை  இது சரி செய்யும். உடம்பில் உள்ள தேவையற்ற நீர்களை மீட்பதற்கு இது பெரிதும் உதவுகிறது.

பிரண்டை அதிக மருத்துவ குணம் இருப்பதால் அதை அப்படியே பயன்படுத்தக்கூடாது அதில் சில பொருட்களை சேர்த்து அதை துவையலாக செய்து சாப்பிடலாம்.

பிரண்டை துவையல் நாம் எப்பொழுதும் செய்யும் துவையலை போல செய்து சாப்பிடலாம்


பிரண்டை துவையல் செய்வது பற்றிய குறிப்புக்கு Comment செய்யவும்.

================================================
ADVERTISEMENTS




For more details please visit www.advertisementmart.com

No comments:

Post a Comment